அனைத்து தர மக்களையும் அரவணைக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் நோக்கம் : எல்.முருகன்

 

அனைத்து தர மக்களையும் அரவணைக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் நோக்கம் : எல்.முருகன்

பட்டியலினத்தைச் சேர்ந்த எல்.முருகன் பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார். 

தமிழக பாஜக கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனைக் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது. அவருக்குப் பிறகு யார் அந்த பதவிக்கு வருவார்கள் என்று கடந்த 4 மாதத்திற்கு மேலாகக் குழப்பம் நிலவி வந்தது.

ttn

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், A.P. முருகானந்தம் உள்ளிட்ட நபர்களுள் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படலாம் என்று தகவல் வெளியான நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த எல்.முருகன் பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார். 

ttn

இந்நிலையில் இன்று கோவை விமான விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “இந்து இயக்கங்களைச் சேர்ந்த ஆனந்த், சூரிய பிரகாஷ் ஆகியோர் தீவிரவாதிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட ஒரு சிலர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பலர் கைது செய்யப்படவில்லை . இதுபோன்ற தீவிரவாதங்களைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கட்சியை வளர்க்கத் தொய்வின்றி செயல்பட்டு வருகிறோம். பா.ஜ.க சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களையும் அரவணைக்க வேண்டும் என்று நோக்கில் செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.