அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி.. என அறிவிக்கச் சொல்லலாமா..? கடுப்பேற்றும் மு.க.ஸ்டாலின்..!

 

அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி.. என அறிவிக்கச் சொல்லலாமா..? கடுப்பேற்றும் மு.க.ஸ்டாலின்..!

அனைத்து தொகுதியிலும் திமுகவே வெற்றி என்று அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கலாம்.

ஓட்டு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை மாநில தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், எதற்கெடுத்தாலும் திமுக போராட்டம், வழக்குத் தொடுப்பதால் பலரும் அதிருப்தியாகி வருகின்றனர். ’’இது ஒரு தவறான முன்னுதாரணம். எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்திற்கு செல்வது, நீதிமன்றமும் வசதிக்கு நடுராத்திரியில் விசாரிக்க ஏற்றுக்கொள்வது… இது என்ன அவ்வளவு தலைபோகிற காரியமா நடுராத்திரியில் விசாரிக்க?

stalin

 நீதிபதிகள் இன்னொரு உத்தரவையும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பித்திருக்கலாம். அனைத்து தொகுதியிலும் திமுகவே வெற்றி என்று அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கலாம். இல்லை என்றால் மேலும் மேலும் வழக்கு போட்டு நீதிபதிகளின் உயிரை வாங்குவார்கள். ஊடகங்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.Edappadi palanisamy

இப்படி ஸ்டாலினின் வெற்றிக்கு படாதபாடு படக்கூடாது. காலையில் இருந்து ஸ்டாலினின் பேட்டி மற்றும் திமுகவினரின் சாலை மறியல், போராட்டத்தை போட்டு  காண்பித்தார்கள். திமுகவினரின் குற்றச்சாட்டை மறுத்து, 2006 ல் திமுக நடத்திய உள்ளாட்சி தேர்தலை சுட்டி காட்டி பொன்னையன், செம்மலை பேட்டி கொடுத்ததை மறைத்து விட்டார்கள்’’ என கொதிக்கின்றனர்.