அனுமதி இல்லையென்றால் 8 வழிச்சாலை ரத்து யுவரானர், ஆனா ‘எப்படியும்’ அனுமதி வாங்கிடுவோம்!

 

அனுமதி இல்லையென்றால் 8 வழிச்சாலை ரத்து யுவரானர், ஆனா ‘எப்படியும்’ அனுமதி வாங்கிடுவோம்!

சென்னை வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மார்க்கத்திலும், சென்னை, திண்டிவனம், ஆத்தூர் மார்க்கத்திலும் சேலத்திற்கு இருவழிப்பாதை சென்னையிலிருந்து உண்டென்றாலும், தமிழகத்திலேயே முதன்முறையாக எடப்பாடி ஊருக்கெல்லாம் எட்டுவழிச்சாலை கொஞ்சம் ஓவர் என்பதை எடப்பாடியார் எப்போதறிவார்?

சென்னையிலிருந்து பெங்களுருவுக்கே ஆறுவழிச்சாலைதான், அதுவும் வேலூர் மாவட்டத்திலிருந்துதான். அதைவிட அதிகம் போக்குவரத்து புழங்கும் திருச்சி, மதுரை சாலைகளில் ஆறுவழிகூட இல்லை, நான்குவழிச்சாலைதான். ஆனால், எங்க சொந்த ஊரான எடப்பாடிக்கு பெருசா ஏதாச்சும் பண்ணியே தீருவேன் என அடம்பிடிக்கும் எடப்பாடியார், சென்னையிலிருந்து சேலத்திற்கு எட்டுவழிச்சாலை அமைத்தே தீருவது என ஒற்றைக்காலில் நிற்கிறார். சென்னை வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மார்க்கத்திலும், சென்னை, திண்டிவனம், ஆத்தூர் மார்க்கத்திலும் சேலத்திற்கு இருவழிப்பாதை சென்னையிலிருந்து உண்டென்றாலும், தமிழகத்திலேயே முதன்முறையாக எடப்பாடி ஊருக்கெல்லாம் எட்டுவழிச்சாலை கொஞ்சம் ஓவர் என்பதை எடப்பாடியார் எப்போதறிவார்?

Protesting against 8 lane project

நல்லவேளையாக கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மேற்படி சாலை பணிகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இருந்தும், இந்த தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திட்ட இயக்குநர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில், “சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்றால், திட்டத்தை நிறைவேற்ற முனைப்பு காட்ட மாட்டோம், ஆனால், அனுமதி கிடைத்துவிடும் என நம்புவதாக” தெரிவித்துள்ளனர்.