அனுமதியில்லாமல் செல்ஃபி எடுக்கலாமா? நடிகர் சூர்யாவின் கேள்விக்கு பிரபல எழுத்தாளர் பதில்!

 

அனுமதியில்லாமல் செல்ஃபி எடுக்கலாமா? நடிகர் சூர்யாவின் கேள்விக்கு பிரபல எழுத்தாளர் பதில்!

பிரபலமானவர் என்பதால் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதா என்று ரசிகர்களைச் சாடிய நடிகர் சூர்யாவுக்கு எழுத்தாளர் சாருநிவேதிதா பதிலளித்துள்ளார்.

சென்னை: பிரபலமானவர் என்பதால் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதா என்று ரசிகர்களைச் சாடிய நடிகர் சூர்யாவுக்கு எழுத்தாளர் சாருநிவேதிதா பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களை நாம் உபயோகிக்கும் முறை பற்றி சூர்யா விவரித்திருந்தார். அதில், பிரபலமானவர் என்பதால் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கலாம் என்று நினைப்பது, தனிப்பட்ட உரிமையை மீறுகிற செயல். அந்த அடிப்படையில் தான்   என் தந்தையார் அந்த இளைஞரின் செல்போனைத் தட்டிவிட்டார். இச்சம்பவத்துக்கு இணைய உலகம் ஆற்றிய எதிர்வினை, அவரது 75 ஆண்டு கால வாழ்வையே கேலிசெய்தது. ‘விமர்சனம்’ என்ற பெயரில் காழ்ப்புணர்வைக் கொட்டுவதும், வயதுக்கும் அனுபவத்துக்கும் எவ்விதமான மதிப்பையும் வழங்காமலிருப்பதுதான் எதிர்வினையா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

charu

இதற்கு பதிலளிக்கும் வகையில் எழுத்தாளர் சாருநிவேதிதா தனது பேஸ்புக் மூலமாக சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம்:

அன்புத் தம்பி சூர்யாவுக்கு…

சமீபத்தில் இந்து தமிழ் நாளிதழில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். சினிமா நடிகர்களால் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவே வாழ முடியவில்லை; விமான நிலையத்தில் அற்பசங்கை பண்ணி விட்டு வந்தால் கூட கை குலுக்குகிறார்கள்; செல்ஃபி எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்பது உங்கள் புகார். உங்கள் தந்தை சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனைத் தட்டி விட்டது தவறுதான் என்றாலும் ரசிகர்களின் டார்ச்சரும் தாங்க முடியாததாக இருக்கிறது என்பது உங்கள் கட்டுரையின் சாரம். இது பற்றி உடனடியாக உங்களுக்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் இல்லை. தம்பி சூர்யா, நீங்களும் உங்களைப் போன்ற ஹீரோக்களும் வாங்கும் சம்பளம் 50 கோடி, 60 கோடி ரூபாய். ஆனால் துப்புரவுத் தொழிலாளியின் மாதச் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? வெறும் 6000 ரூ. அறுபது கோடிக்கும் ஆறாயிரம் ரூபாய்க்கும் எத்தனை வித்தியாசம்?

 

தமிழ்நாட்டில் சினிமாதான் மதம். நீங்களெல்லாம் கடவுள்கள். எம்ஜியார் ஒரு கடவுள். சிவாஜி ஒரு கடவுள். கமலை மட்டும் ஆண்டவர் என்று சொல்லுவோம். ஏனென்றால் அவர் நாஸ்திகர். ரஜினி கடவுள். விஜய் கடவுள். அஜித் கடவுள். நீங்கள் கடவுள். உங்கள் தம்பி கார்த்தி கடவுள். ஏன், முன்பு அப்பாஸ் என்று ஒரு நடிகர் இருந்தாரே அவர் கூட கடவுள்தான். அப்படித்தான் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்’ என்று ஒரு சில உதாரணங்களுடன் அந்த கடிதம் முடிகிறது.