அனுமதித்த இடத்தில் அமைதியாக வெடியுங்கள் ! மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் !

அனுமதித்த இடத்தில் அமைதியாக வெடியுங்கள் ! மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் !

சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க தீபாவளி அன்று அனுமதித்த நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

crackers

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறத மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சில அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளது.
குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் முன் அனுமதியுடன் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.
அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.