அனிமேஷனில் யோகா செய்யும் மோடி: வைரல் வீடியோ!

 

அனிமேஷனில் யோகா செய்யும் மோடி: வைரல் வீடியோ!

தடாசனா மற்றும் திரிகோனாசனா ஆகிய யோகாசனங்கள் செய்வது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

தடாசனா மற்றும் திரிகோனாசனா ஆகிய யோகாசனங்கள் செய்வது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

யோகாசனம் என்பது நம் உள்ளத்தைக் கட்டுப்படுத்தி உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு வழிமுறையாகும். அந்த வகையில் பிரதமர் மோடி யோகா மற்றும் தியான பயிற்சிகளில் நாட்டம் உடையவராக உள்ளார். இதை மற்றவர்களும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

yoga

அதன் காரணமாகக் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதில் உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்றார்.  அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது. 

mdi

இந்நிலையில் வரும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக  மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தடாசனா மற்றும் திரிகோனாசனா ஆகிய யோகாசனங்கள்  எப்படிச் செய்வது என்று விளக்கமளிக்கும் அந்த வீடியோவில் மோடி அனிமேஷன் உருவத்தில் அதை விளக்குவதாக உள்ளது. 

 

மேலும் அந்த பதிவில், தடாசனா யோகாவை முறையாகச் செய்யப் பழகினால், மற்ற பல யோகாசனங்களைச் சுலபமாகச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.