அனிதாவை மறந்த அரசியல்வாதிகள்…. கனவை கலைத்த நீட்! காற்றில் கலந்து 2 ஆண்டுகள் நிறைவு!! 

அனிதாவை மறந்த அரசியல்வாதிகள்…. கனவை கலைத்த நீட்! காற்றில் கலந்து 2 ஆண்டுகள் நிறைவு!! 

மருத்துவராகும் கனவுடன் உச்சநீதிமன்றம் வரை நீட்டுக்காக போராடிய அரியலூர் அனிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மருத்துவராகும் கனவுடன் உச்சநீதிமன்றம் வரை நீட்டுக்காக போராடிய அரியலூர் அனிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி தற்கொலை செய்துக் கொண்டவர் மாணவி அனிதா. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, கடந்த 2017ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், அதில் போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடினார்.

Neet

உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தனது மருத்துர் கனவு கலைந்த விரக்தியில், கடந்த 2017, செப்.1ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவம், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

டாக்டர் அனிதா இறந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நீட் எனும் அரக்கன் உருவாகாமல் இருந்திருந்தால் அந்த மாணவி இன்று தனது மருத்துவ படிப்பில் இரண்டாம் ஆண்டு முடித்திருப்பார். ஆனால் இன்றோ அவருக்கு இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.