‘அ’னாவுக்கு அடியெழுத்து தெரியாது, ஆனால் இன்சினியர்! நம்புங்கள், உண்மை!

 

‘அ’னாவுக்கு அடியெழுத்து தெரியாது, ஆனால் இன்சினியர்! நம்புங்கள், உண்மை!

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என புத்தகப் பாடம் சொல்லித்தரும் கல்லூரி அல்ல, வாழ்க்கைப்பாடம் சொல்லித்தரும் அமைப்பு இது. உலகெங்கும் பல்வேறு இடங்களில் இவர்களுக்கு கிளைகள் இருந்தாலும், இவர்களின் பிரதான நோக்கம் அடித்தட்டு மக்களுக்குத் தேவையான வாழ்க்கை கல்வியை கற்றுத்தருவது.

ராஜஸ்தானில் செயல்பட்டு வருகிறது பேர்ஃபுட் காலேஜ், தமிழ்ப்படுத்தணும்னா வெறுங்கால் கல்லூரி. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என புத்தகப் பாடம் சொல்லித்தரும் கல்லூரி அல்ல, வாழ்க்கைப்பாடம் சொல்லித்தரும் அமைப்பு இது. உலகெங்கும் பல்வேறு இடங்களில் இவர்களுக்கு கிளைகள் இருந்தாலும், இவர்களின் பிரதான நோக்கம் அடித்தட்டு மக்களுக்குத் தேவையான வாழ்க்கை கல்வியை கற்றுத்தருவது. பராமரிப்புப் பணிக்காக மாதம் ஒருமுறை நமது ஏரியாவில் மின்சாரம் நிறுத்தும்போது நமக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது, ஆனால் இன்னமும் உலகெங்கும் 110 கோடி பேருக்கு மின்சார வசதி கிடையாது.

Sex Education

இம்மாதிரி மின்சார வசதி இல்லாத கிராமங்களில் இருந்து பெண்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சூரிய மின் தகடுகள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பாடம் எடுக்கிறது பேர்ஃபுட் கல்லூரி. இவர்களிடம் பாடம் பயிலும் பெண்கள் பெரும்பாலும் அடிப்படை கல்விகூட பெறாதவர்கள். ஆனால், மாநிலத்தின் மிகமுக்கிய கல்லூரியில் நான்கு வருடம் இஞ்சினியரிங் பயின்ற மாணவன் செய்ய முடியாததை இந்தப் பெண்களால் செய்ய முடியும். எனவே, இவர்களை சோலார் இன்சினியர்கள் என்று சொன்னாலும் தகும். நாலு ஹிட் படம் கொடுப்பதாலேயே டாக்டர்கள் ஆகிவிடுவதில்லையா? ரைட்டு. வெறும் சூரிய மின் தகடுகள் குறித்த கல்வி மட்டுமல்ல, பெண்களுக்குத் தேவையான பாலியல் குறித்த புரிதலை ஏற்படுத்துவதிலும் பேர்ஃபுட் காலேஜின் பணி மெச்சத்தக்கது!