அனல் பறக்கும் பரப்புரை களம்: விவாதத்திற்கு அழைத்த அன்புமணி: சவாலை ஏற்ற உதயநிதி

 

அனல் பறக்கும் பரப்புரை களம்: விவாதத்திற்கு அழைத்த அன்புமணி: சவாலை ஏற்ற உதயநிதி

விவாதத்திற்கு அழைத்த அன்புமணியின் சவாலை ஏற்றுக்கொள்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை: விவாதத்திற்கு அழைத்த அன்புமணியின் சவாலை ஏற்றுக்கொள்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

anbumani

நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களை அறிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக-வும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. தங்களது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும் ஆதரித்து அந்தந்த கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

anbumani

அந்த வகையில், தென் சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ‘ திமுகவினர் தனிநபர் விமர்சனம் செய்கின்றனர். ஸ்டாலினும் அவரது மகனும் மிகவும் கொச்சையான வார்த்தைகளால் என்னையும், ராமதாஸ் அவர்களையும், விமர்சித்து வருகிறார்கள்.  நான் ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். நீங்கள் மேடையைப் போடுங்கள், நான் வருகிறேன். நீங்கள் வாருங்கள் அல்லது உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலினை அனுப்புங்கள்.தமிழ்நாட்டின் நலன் தமிழ்நாட்டின் திட்டங்களைப் பற்றி நாம் விவாதம் பண்ணலாம். நான் விவாதத்துக்குத் தயார் நீங்கள் தயாரா?’ என அன்புமணி சவால் விட்டிருந்தார்.

udhay

இந்நிலையில் பரப்புரை களத்தில் பரபரப்பாக இருந்த  உதயநிதி ஸ்டாலினிடம் அன்புமணியின் சவால் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதியோ, ‘சவாலை ஏற்கிறேன்.  அன்புமணி கூட்டத்தைப் போடட்டும். நானே வருகிறேன். முதலில் எட்டுவழிச்சாலை திட்டம் குறித்து விவாதிக்கலாம்’ என்றார். 

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறி விட்டு பணத்திற்காகவும், பதவிக்காகவும் அதிமுகவுடன்  கூட்டுச் சேர்ந்துள்ள அன்புமணி திமுகவை வம்பிழுப்பது நல்லதல்ல என்று  திமுகவினர் கூறிவருகின்றனர். 

இதையும் வாசிக்க: கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, மனைவியை கொன்ற கணவன்: சென்னையில் நடந்த கொடூரம்!