அனல்பறக்கும் தீயிக்கு நடுவில் அம்மனாக நயன்தாரா! வெளியானது மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக்!! 

 

அனல்பறக்கும் தீயிக்கு நடுவில் அம்மனாக நயன்தாரா! வெளியானது மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக்!! 

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கும் படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, நயன் தாரா, நடிகை ஊர்வசி, மௌலி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஜசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கும் படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, நயன் தாரா, நடிகை ஊர்வசி, மௌலி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஜசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜையானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அதன்பின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. 

Mookuthi Amman
மூக்குத்தி அம்மன் என்று தலைப்பு இருப்பதால் ஒரு பக்தி படமாக இருக்கலாம் என்று அனைவரும் கருதுகின்றனர். ஆனால் படக்குழுவினர் இது ஒன்றும் பக்தி படமல்ல. முழுக்க முழுக்க மக்களை மகிழ்விக்க எடுக்கப்பட்ட படம் என்று கூறியுள்ளனர்.

நயன்தாரா

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் அனல் பறக்கும் தீயிக்கு நடுவில் கையில் சூலத்துடன் நிற்கிறார்.