அனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை…20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்!  

 

அனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை…20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்!  

தேர்தல் வந்ததால் பல பேர் சம்மர் லீவுக்கு சுற்றுலா போகும் திட்டத்தை தள்ளி வைத்திருப்பீர்கள். இப்போது உங்களுக்கு இருக்கிற பிரச்சினையே இந்த சம்மருக்கு எங்கே போகலாம் என்பதாகத்தான் இருக்கும்!

தேர்தல் வந்ததால் பல பேர் சம்மர் லீவுக்கு சுற்றுலா போகும் திட்டத்தை தள்ளி வைத்திருப்பீர்கள். இப்போது உங்களுக்கு இருக்கிற பிரச்சினையே இந்த சம்மருக்கு எங்கே போகலாம் என்பதாகத்தான் இருக்கும்! குழந்தைகள் எங்கே போகணும்னு விரும்புறாங்களோ அங்கே போகலாம்னு பிளான் இருக்கு என்பவராக நீங்கள் இருந்தால் இந்த முறை திருவனந்தபுரம் போய் வாருங்கள்.

முதல் முதலில் உலகத்தில் இவ்வளவு பெரிய பாம்புகளெல்லாம் இருக்குமா என்று ஆச்சர்யப்பட வைத்த படம் ‘அனகொண்டா’. அதே போல் அனகொண்டாவைப் பார்க்க அமேசான் காட்டுக்கு போக வேண்டியதில்லை, கேரளாவிலுள்ள திருவனந்தபுரம் ஜூவுக்கு போனால் போதும்.

anakonda

 
நாம் போய் பார்த்த பொழுது அமேசான் சதுப்பு நிலங்களில் இருக்க வேண்டிய நான்கு,ஐந்து அனகொண்டாக்கள் குளிரூட்டப்பட்ட அறையின் கண்ணாடி தொட்டிகளில் நிரப்பப்பட்ட நீரீல் சோம்பலாக தனித்தனியே படுத்திருந்தன.திரைப்படத்தில் காட்டியது போல் அனகொண்டா ஒன்றும் அட்ராசிட்டி பாம்பு இல்லை என அறிந்திருந்தாலும்,அதிர்ச்சியாகத் தான் இருந்தது!

   

anakonda

  
 
அனகொண்டாவைப் பார்க்கையில் ஏனோ,தெருக்களில் பிச்சையெடுக்கும் பிரமாண்ட யானைகளின் ஞாபகம் வந்து போனது. திருவனந்தபுரம் Zoo போனால் இருபது ரூபாய்க்கு ஐந்து அனகோண்டாக்களை சல்லிசாக பார்த்து வரலாம்.இந்த கட்டணம் ஆட்களின் வருகையைப் பொருத்து கூட குறைய இருக்கலாம்! இருந்தாலும் மிஸ் பண்ணிராதீங்க.

anakonda

என்ன குழந்தைகளுக்கு ஒரிஜினல் அனகோண்டாவை காண்பிக்க இப்பவே கிளம்புறீங்களா…?

இதையும் படிங்க: தெரிந்த இடங்கள்…தெரியாத விபரங்கள்… ஆச்சரியப்படுத்தும் சென்னை!