அந்த விஷயம் என் மகனுக்கு நடந்து விடவே கூடாது… உதயநிதிக்காக கலங்கும் மு.க.ஸ்டாலின்..!

 

அந்த விஷயம் என் மகனுக்கு நடந்து விடவே கூடாது… உதயநிதிக்காக கலங்கும் மு.க.ஸ்டாலின்..!

ஸ்டாலின் கணக்கு வேறாக இருக்கிறது. தான் மேயராக இருந்து அமைச்சர் பொறுப்புகள் வகித்து, துணை முதல்வராகி இப்போதுதான் முதலமைச்சராக போராடி வருகிறேன்.

சென்னை மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலினை களமிறக்க, திட்டம் போட்டு இருக்கிறார்கள். 

நடிகராக இருந்த, ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு தி.மு.க., இளைஞரணி செயலராக புரமோஷன் கொடுத்தது முதல் அக்கட்சியின் அதிகார மையமாக திகழ்ந்து வருகிறார். அடுத்து அவரை, சென்னை மேயர் வேட்பாளராக நிறுத்த, ஆலோசனை நடந்து வருகிறது.

udhayanidhi

கருணாநிதியிடம் இருந்த கட்சித் தலைவர் பதவியை அவரது மகன் ஸ்டாலினுக்கு கொடுத்தார்கள். ஸ்டாலினிடம்  இருந்த இளைஞரணி தலைவர் பதவியை அவரது மகன் உதயநிதியிடம் கொடுத்து இருக்கிறார்கள்.  அந்த  வரிசையில் ஸ்டாலின், சென்னை மேயராக இருந்தவர் என்பதால், உதயநிதிக்கும் அந்தப் பதவி மீது ஆசை ஏற்பட்டு இருக்கிறதாம்.  ‘மக்களவை தேர்தலில் சென்னையில் தி.மு.க. வெற்றி பெற்றதால் எளிதாக சென்னை மேயராக வெற்றி பெற்று விடலாம்’ என இளைஞர் அணி நிர்வாகிகள், கணக்கு போட்டு வருகிறார்கள்.

udhayanidi

 ஆனால், ஸ்டாலின் கணக்கு வேறாக இருக்கிறது. தான் மேயராக இருந்து  அமைச்சர் பொறுப்புகள் வகித்து, துணை முதல்வராகி இப்போதுதான் முதலமைச்சராக போராடி வருகிறேன். அப்போது இத்தனை பதவிகளை தாண்டி வர காலம் இருந்தது. உதயநிதி விஷயத்தில் அப்படி இல்லை. அவனுக்கு வெகு விரைவில் கிடைக்க வேண்டிய பதவிகளை கொடுத்தே ஆக வேண்டும். 

udhayanidhi

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் களமிறக்கி துணை முதல்வராக்கி தமிழகம் முழுவதும் அவரை பிரபலப்படுத்தி தான் இருக்கும்போதே நாற்காலியை கெட்டியாக்கி விட்டுப்போக வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் உதயநிதிக்கு மேயர் பதவி ஆசையை எல்லாம் தூக்கி எறிந்து விடுங்கள். நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய இருக்கிறது என உத்தரவு போட்டு விட்டாராம் மு.க.ஸ்டாலின்.