‘அந்த’ விஷயத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு, தைவான்

 

‘அந்த’ விஷயத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு, தைவான்

‘அந்த’ என்றவுடன் ‘அசைவ’ சமாச்சாரம் என்று ஆசையோடு தலைப்பை க்ளிக்கியவர்கள் ஏமாற போகிறீர்கள். நீங்கள் ஆசையோடு எதிர்பார்த்த கஜாகஜா விஷயம் அல்ல, மாறாக முற்போக்கான செய்திதான்.

‘அந்த’ என்றவுடன் ‘அசைவ’ சமாச்சாரம் என்று ஆசையோடு தலைப்பை க்ளிக்கியவர்கள் ஏமாற போகிறீர்கள். நீங்கள் ஆசையோடு எதிர்பார்த்த கஜாகஜா விஷயம் அல்ல, மாறாக முற்போக்கான செய்திதான். ஓர் பாலின சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை தைவான் பெற்றுள்ளது.

taiwan

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஓர் பாலின சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஏற்று உத்தரவிட்ட அந்நாட்டு நீதிமன்றம், அத்தகைய திருமணங்களுக்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தும் அளவுக்கு சட்டத்தை திருத்துமாறு அரசுக்கும் உத்தரவிட்டு இருந்தது. அதனை ஏற்ற தைவான் அரசு, இப்போது ஓர் பாலின திருமண ஜோடிகளுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்துள்ளது.

gay

திருமணத்துக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அவர்களுக்கான காப்பீடு, வரிகள், மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் தேவையான சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. நம்ம ஊர்ல வீடியோ பார்க்கவே தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தைவானின் முற்போக்குக்கு ஒரு சல்யூட்