‘அந்த மாதிரி’ படத்தில் நடிச்சா ‘அந்த மாதிரி’ பொண்ணுன்னு அர்த்தமா? கடுப்பான யாஷிகா

 

‘அந்த மாதிரி’ படத்தில் நடிச்சா ‘அந்த மாதிரி’ பொண்ணுன்னு அர்த்தமா? கடுப்பான யாஷிகா

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குக்கேற்று வலுவான போட்டியாளராகத் திகழ்ந்து, மக்கள் மனத்தை வென்றார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில்  ஏன் நடித்தேன்  என்று தற்போது வருந்துகிறேன் என்று யாஷிகா தெரிவித்துள்ளார்.  

yashika

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குக்கேற்று வலுவான போட்டியாளராகத் திகழ்ந்து, மக்கள் மனத்தை வென்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் மகத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் இருவரும் நண்பர்களாகப் பழகி வருகின்றனர். பிக் பாஸிற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி, அடுத்தடுத்து ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

yashika

இந்நிலையில் யாஷிகா இன்ஸ்டராகிராமில் பதிவிடும் சில புகைப்படங்களுக்கு சில ரசிகர்கள்  அத்துமீறி கமெண்ட் அளித்தும் எல்லைமீறியும் பேசி வருகின்றனர். இதனால் கடுப்பான யாஷிகா, ‘ஒருவர் படத்தில் நடிப்பதை வைத்து நிஜத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள்.இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்தது தான் இதற்கெல்லாம் காரணம், அந்த படத்தில் ஏன் நடித்தேன்  என்று தற்போது வருந்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.