அந்த படத்தில் நான் தான் நடிக்கிறேன்: உண்மையை போட்டு உடைத்த காஜல் அகர்வால்!

 

அந்த படத்தில் நான் தான் நடிக்கிறேன்: உண்மையை போட்டு உடைத்த காஜல் அகர்வால்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்2’ படத்தின் நாயகியாக நடிக்கவிருப்பதை நடிகை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்2’ படத்தின் நாயகியாக நடிக்கவிருப்பதை நடிகை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தை போலவே இரட்டை வேடங்களில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். அதற்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர் சில நிபந்தனைகள் விதித்ததால், அவருக்கு பதில் தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள காஜல் அகர்வாலை படக்குழு அனுகியதாக கூறப்பட்டது.

தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை காஜல் அகர்வால், ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தான் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக இயக்குநர் ஷங்கர் முன்னிலையில், அவருக்கு லுக் டெஸ்ட் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

காஜல் அகர்வாலை தொடர்ந்து ’இந்தியன் 2’ படத்தின் துல்கர் சல்மான்,சிம்பு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது .