அந்த தொகுதியில போட்டியே போடல! மக்களின் வாக்கு சதவீதமா?…  கருத்துக்கணிப்பை கலாய்க்கும் நெட்டிசன்கள்! 

 

அந்த தொகுதியில போட்டியே போடல! மக்களின் வாக்கு சதவீதமா?…  கருத்துக்கணிப்பை கலாய்க்கும் நெட்டிசன்கள்! 

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் யாருமே போட்டியிடாத நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மக்களின் 3-5 % வாக்குகள் காஞ்சிபுரத்திற்குதான் என கூறியிருப்பது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. 

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் யாருமே போட்டியிடாத நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மக்களின் 3-5 % வாக்குகள் மக்கள் நீதி மய்யத்திற்குதான் என கூறியிருப்பது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. 

ss

வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான கடந்த மார்ச் 26-ந்தேதி வேட்பு மனு பரிசீலனையின்போது காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியான இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் தங்கராஜ் வேட்புமனு உரிய ஆவணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. இதேபோன்று பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமார் தாமதமாக வந்ததாலும்,  மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணனின் மனு முன்மொழிவோர் கையெழுத்து இல்லாததாலும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தனியார் செய்தி தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் காஞ்சிபுரத்தில் உங்கள் வாக்கு யாருக்கு என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 3 முதல் 6 சதவீதம் என சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. போட்டியே போடவில்லை எப்படி வாக்குவீதம் மட்டும் கிடைத்தது என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து  வருகின்றனர்.