அந்தியூர் செல்வராஜ் லிஸ்ட்லயே இல்லையே… முணுமுணுக்கும் தி.மு.க பெருந்தலைகள்!

 

அந்தியூர் செல்வராஜ் லிஸ்ட்லயே இல்லையே… முணுமுணுக்கும் தி.மு.க பெருந்தலைகள்!

நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வேட்பாளர்கள் பெயரை தி.மு.க முதலில் அறிவித்துள்ளது.அ.தி.மு.க வட்டாரத்தில் புயலை ஏற்படுத்தியுள்ள மாநிலங்களவை தேர்தல்,தி.மு.க வட்டாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வேட்பாளர்கள் பெயரை தி.மு.க முதலில் அறிவித்துள்ளது.அ.தி.மு.க வட்டாரத்தில் புயலை ஏற்படுத்தியுள்ள மாநிலங்களவை தேர்தல்,தி.மு.க வட்டாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்சி சிவாவுக்கு எம்.பி சீட் நிச்சயம் கிடைக்கும் என்று தி.மு.க அனுதாபிகளுக்கே கூட தெரியும்.நாடாளுமன்றத்தில் தி.மு.க-வுக்காக அதிகம் குரல் கொடுக்கும் நபர் திருச்சி சிவா. அதனால் அவருக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வில் உள்ள அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

dmk siva

அடுத்தது என்.ஆர்.இளங்கோ. கடந்த முறை வைகோ மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட போது மாற்று வேட்பாளராக தி.மு.க சார்பில் முன்மொழியப்பட்டவர் என்.ஆர்.இளங்கோ.தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால் என்.ஆர்.இளங்கோவை டெல்லிக்கு அனுப்புவது என்று தி.மு.க முடிவு செய்திருந்தது.வைகோ வேட்புமனு ஏற்கப்பட்டதால் என்.ஆர்.இளங்கோ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.தற்போது தேர்தல் வந்துள்ள நிலையில் அவருக்கு சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்துக்குத்தான் தி.மு.க-வில் மிகக் கடுமையான போட்டி நடந்து வந்தது. இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பும்,தாழ்த்தப்பட்டோருக்கு வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பும் கூறியது.தாழ்த்தப்பட்டோருக்கு வழங்குவது என்றால் நாகை முன்னாள் எம்.பி கே.எஸ்.விஜயன், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமிக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் அந்தியூர் செல்வராஜுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

selvaraj

தன்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டதில் அந்தியூர் செல்வராஜுக்கே கூட அதிர்ச்சி என்று சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.மாநிலங்களவை சீட் கேட்டு தலைவரை அணுகவில்லை,அப்படி ஒரு ஆசை இருப்பதாகக் கூட காட்டவில்லை,டெல்லி செல்லவும் விருப்பமில்லை… அப்படி இருக்கும்போது எப்படி பெயர் தேர்வானது என்று தெரியவில்லை என்று மகிழ்ச்சியில் புலம்புகிறாராம் அந்தியூர் செல்வராஜ். ஆனால், எப்படியும் சீட் வாங்கிவிடலாம் என்று நம்பிக்கையோடு இருந்த வி.பி.துரைசாமிதான் வருத்தத்தில் இருக்கிறாராம்.அந்தியூர் செல்வராஜுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது கோவை மண்டலத்தில் தி.மு.க-வுக்கு பலத்தைத் தரும் என்று ஸ்டாலின் நம்புகிறாராம்.அதனால்தான் கட்சியின் சீனியர்களுடன் கூட கலந்தாலோசிக்காமல் பெயரை அறிவித்திருக்கிறார் என்கின்றனர். ஒரு பேச்சுக்கு கூட நம்மை கேட்காமல் அறிவித்திருக்கிறாரே என்று தி.மு.க பெருந்தலைகள் முணுமுணுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.