அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!

 

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!

அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில்  இன்று அதிகாலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தமான்: அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில்  இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

earthquake ttn

அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் வருவது வழக்கம். அதன்படி, இன்று அதிகாலை 6.44 மணியளவில் அந்தமான் தீவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. எனினும், இதனால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

 

 

முன்னதாக நிகோபரில் கடந்த பிப்.28ம் தேதி  காலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆகவும், பிப்.13ம் தேதி பேம்பூ பிளாட் உள்ளிட்ட சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகளில் 4.5 என பதிவானது குறிப்பிடத்தக்கது.