அந்தமானில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அந்தமானில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், “தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது. மே 16ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவி வருகிறது.

அந்தமான் பகுதியில் வருகிற 13ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், “தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது. மே 16ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவி வருகிறது.

sea-89

அதற்கு முன்னதாக மே 13ம் தேதி வாக்கில் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் – வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24மணி நேரத்தை பொருத்தவரையில் கன்னியாகுமரி மாவட்டாம் புத்தன் அனைப் பகுதியில் 4 செ.மீ மழையும், சுரளக்கோடு பகுதியில் 3 செ.மீ மழையும், இராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தண்டதனம், வட்டானம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது” என்று கூறியுள்ளது.