’அந்தப் பூனையைக் கண்டுபிடுச்சுக் குடுத்தா ரூ 50 ஆயிரம் பரிசாம்…உடனே ரேணிகுண்டாவுக்குக் கிளம்புங்க’…

 

’அந்தப் பூனையைக் கண்டுபிடுச்சுக் குடுத்தா ரூ 50 ஆயிரம் பரிசாம்…உடனே ரேணிகுண்டாவுக்குக் கிளம்புங்க’…

பெற்ற குழந்தையைப் போல் வளர்த்து வந்த பூனை, ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் மாயமானதால் அதை கடந்த 20 நாட்களாக குஜராத் தம்பதி தேடி வருகின்றனர்.

பெற்ற குழந்தையைப் போல் வளர்த்து வந்த பூனை, ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் மாயமானதால் அதை கடந்த 20 நாட்களாக குஜராத் தம்பதி தேடி வருகின்றனர். அந்தக் குழந்தைப் பூனை கிடைக்காவிட்டால் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதில்லை என்று அவர்கள் பிடிவாதமாய் இருப்பதால் அதை தேடிவரும் ரயில்வே போலீஸார் பதட்டமடைந்துள்ளனர்.

cat

குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்தவர்கள் ஜியாஸ் பாய் – மீனா தம்பதி. இவர்களுக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜியாஸ் பாய் சூரத்தில் துணி வியாபாரம் செய்து வருகிறார். தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால் கடந்த  ஓராண்டுக்கு முன்பு பூனையை தங்களது குழந்தையாக தத்து எடுத்து அதற்கு பாபு என பெயர் சூட்டி தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வந்தனர். கடந்த 9ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்ற ஜியாஸ் – மீனா தம்பதியினர் தங்கள் பூனையுடன் திருப்பதிக்கு வந்தனர். சாமி தரிசனம் செய்த பின்னர், 13ம் தேதி ரேணிகுண்டா ரயில்  நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டனர். அப்போது, மகனாக வளர்த்த பூனையை திடீரென  காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.

cat

தொடர்ந்து பல இடங்களில் தேடினர். இதற்கிடையே தம்பதியிடம் பூனையை கண்டுபிடித்து தருவதாக கூறி  மர்ம நபர்கள் சிலர் ₹50 ஆயிரம் மோசடியும் செய்துவிட்டனர். இருப்பினும் தங்கள்  மகனாக வளர்த்த பூனை (பாபு) கிடைப்பானா?  என   தம்பதியினர் கண்ணீருடன் காத்திருக்கின்றனர். ரயில்வே போலீசார் பூனையை கண்டுபிடித்து தருவதாக உறுதி கூறிய பிறகும், பூனை கிடைக்கும் வரை செல்லமாட்டோம் என ரயில் நிலையத்திலேயே கட்டிய துணியுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே செலவான 50 ஆயிரம் குறித்து எந்தக் கவலையும் இல்லை என்று கூறும் அந்தத் தம்பதி இனியும் பாபுவை யார் கண்டுபிடித்துக் கொடுத்தாலும் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்துள்ளனர்.