அநியாய குளிர்ச்சியைத் தரும் அட்டகாசமான ‘நுங்கு பாயாசம்’!

அநியாய குளிர்ச்சியைத் தரும் அட்டகாசமான ‘நுங்கு பாயாசம்’!

கோடைகாலம் காலங்களில் மட்டும் அதிகமாக கிடைக்கும் நுங்குகளில்  நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக இளம் நுங்குகள் உடலுக்கு ,உடனடியாக குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியவை.

nungu payasam

நாள்தோறும் குறைந்தது இரண்டு நுங்குகளையாவது சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்காமல் பார்த்துக்க முடியும்.சில குழந்தைகளுக்கு நுங்கின் சுவை பிடிப்பதில்லை.தினமும் நுங்கை சாப்பிடுவது போரடிப்பதாக நினைப்பவர்களும் இந்த ‘நுங்கு பாயசம்’ செய்து சாப்பிட்டுப் பாருங்கள்…உங்களால் இதை மறக்கவே முடியாது.இதோ நுங்கு பாயாசம் எப்படி செய்வது என்று பாருங்கள்…

தேவையான பொருட்கள்

பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 100 கிராம்
நுங்கு – 8
பால்கோவா – 25 கிராம்
ஏலக்காய்-2

செய்முறை

nungu payasam

முதலில் பாலை நன்றாக காய்ச்சி விடவும்.பின்பு பாலுடன் பால் கோவா சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி ஆற விடவும்.நுங்கின் தோலை உரித்துவிட்டு நுங்கை பொடியாக நறுக்கி வைக்கவும், இப்போது நறுக்கி வைத்த நுங்கை ஆறவைத்த கலவையுடன் சேர்க்க வேண்டும்.இறுதியாக ஏலக்காய் பொடி தூவி ஃப்ரிட்ஜில் வைத்த பின் பரிமாறவும்.சுவையான நுங்கு பாயாசம் ரெடி!!!!

இதையும் படிங்க: உப்புமாக்களில் எவ்வளவோ வெரைட்டி சாப்பிட்டுருப்பீங்க… இந்த உப்புமா சாப்பிட்ருக்கீங்களா!?