அத்தோ,பேஜா,மொய்ங்கா! சென்னையை கலக்கும் பர்மிய உணவுகள்.

 

அத்தோ,பேஜா,மொய்ங்கா! சென்னையை கலக்கும் பர்மிய உணவுகள்.

பர்மா உணவுகள் சென்னைக்கு வந்து முக்கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சென்னைக்கு அகதிகளாக பல்லாயிரம் தமிழர்கள் வந்தார்கள்.அதில் தமிழரை மணந்த பர்மியரும் இருந்தனர்.அவர்களுக்கு சென்னை இரண்டாவது கடற்கரைச் சாலையை ஒட்டி கடைகள் அமைத்துக் கொடுத்தது தமிழக அரசு.

பர்மா உணவுகள் சென்னைக்கு வந்து முக்கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சென்னைக்கு அகதிகளாக பல்லாயிரம் தமிழர்கள் வந்தார்கள்.அதில் தமிழரை மணந்த பர்மியரும் இருந்தனர்.அவர்களுக்கு சென்னை இரண்டாவது கடற்கரைச் சாலையை ஒட்டி கடைகள் அமைத்துக் கொடுத்தது தமிழக அரசு.அந்த கடைக்காரர்களின் தேவைக்காக அதே பகுதியில் பாரம்பரிய பர்மா உணவகங்களும் ஏற்பட்டன.இந்தக் கடைகள் இப்போது சென்னை முழுவதும் பரவிவிட்டாலும்,சென்னை செகண்ட்லைன் பீச்சில் இருக்கும்

atho

இந்தியன் வங்கி கட்டிடத்துக்கு பின்னால் இருக்கும் பெயரில்லாத கடைதான் நம்பர் ஒன் ஃபேவரிட்டாக இருக்கிறது, அத்தோ ரசிகர்களுக்கு.
பர்மிய் உணவுகள் அடிப்படையில் மிகவும் எளிமையானவை.ஒரு பெரிய பேசினில் மெலிதாக வெட்டிய முட்டைக்கோசு, வெங்காயம் இவற்றுடன் ,உப்புத்தண்ணீர்,பூண்டு எண்ணெய் போன்ற அவர்களின் செந்த தயாரிப்புகள்,காய்ந்த மிளகாய் ஃப்ளெக்ஸ் சேர்த்து,பொட்டுக்கடலை,வேர்க்கடலை சேர்த்தெடுத்த மாவை கொஞ்சம் சேர்த்து பிசைகிறார்கள்.

pejo-soup

அதில் உப்புச்சேர்த்து வேகவைத்த அரிசி நூடுல்ஸ்,நம்ம ஊர் தட்டுவடையின் சாயலில் கொண்ஜ்சம் பெரிதாக இருக்கும் பேஜாவையும் உடைத்துப் போட்டு,கொஞ்சம் வாழைத்தண்டு சூப் சேர்த்து கலக்கி ஒரு கப்பில் அள்ளிப்போட்டு ஒரு ஸ்பூனைச் செருகி தருகிறார்கள். மேப்பில்கூட பர்மாவை பார்த்திராத சென்னை மக்கள் அதை வெளுத்துக் காட்டுகிறார்கள். இதில் சிக்கன் சேர்த்து,முட்டை சேர்த்து பல அசைவ மொய்ஞான் வகைகளும் வந்து விட்டன.இத்துடன் இரண்டு சைட் டிஷ்கள் உண்டு.ஒன்று மசாலா முட்டை.அவித்த முட்டையை கீறி,நாம் முதலில் பார்த்த உப்புத் தண்ணீர், பூண்டு எண்ணெய் , சில்லிப் பிளெக்ஸ் திணித்து, மொரு மொருப்பாக வறுத்த வெங்காயம் வைத்து தருவார்கள், நீங்கள் அதை வாங்கி அப்படியே முழுதாக வாய்க்குள் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும்.

moginya

இன்னொரு ஸ்பெஷல் வாழைத்தண்டு சூப்! மீன் வேகவைத்த தண்ணீர் வாழைத்தண்டு, இரண்டும் முதலிடம் வகிக்கும் இந்த சூப் இல்லாமல் பர்மா உணவு இல்லை. இந்த அத்தோ தவிர,கெளஷி,மொய்ங்கா என்பவையும் பிரபலமாக இருக்கின்றன. வெளியூர்காரர்கள் அடுத்த முறை சென்னை வரும்போது இதை முயற்சித்துப் பாருங்கள்.உள்ளூர் சென்னை வாசிகள் , மாலை வேளையில் பாரிமுனை போனால் தவறவிட்டாமல் ருசித்துப் பாருங்கள்.