அத்தைக்கு மீசை முளைக்கிறதுக்குள்ள காங்கிரஸும் பாஜகவும் அடிச்சுக்கிறதைப் பாருங்க!

 

அத்தைக்கு மீசை முளைக்கிறதுக்குள்ள காங்கிரஸும் பாஜகவும் அடிச்சுக்கிறதைப் பாருங்க!

உடம்புக்கு சரியில்லாமல் போனபிறகு நடிப்பை குறைத்துக்கொள்வார் என நினைத்துக்கொண்டிருக்கும்போது, விஜய் சேதுபதியைவிட அதிக படங்களில் கமிட்டாகி இருப்பதைப் பார்த்தால், ரஜினி அரசியலுக்கு விரும்பி வருகிறாரா, இல்லை இழுத்து வருகிறார்களா என்ற சந்தேகம் எழுவதில் தவறில்லை.

உடம்புக்கு சரியில்லாமல் போனபிறகு நடிப்பை குறைத்துக்கொள்வார் என நினைத்துக்கொண்டிருக்கும்போது, விஜய் சேதுபதியைவிட அதிக படங்களில் கமிட்டாகி இருப்பதைப் பார்த்தால், ரஜினி அரசியலுக்கு விரும்பி வருகிறாரா, இல்லை இழுத்து வருகிறார்களா என்ற சந்தேகம் எழுவதில் தவறில்லை. ரஜினியும் தன் அரசியல் வருகை குறித்து இந்த இழு இழுக்கவேண்டாம். முத்து படத்தோடு சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு இமயமலை பக்கம் ஓய்வெடுக்க செல்லலாம் என ரஜினி நினைத்ததாக சொல்லப்படுவதுண்டு. ஆனால், அதே ரஜினி முத்து பட விழாவின்போது “மீனா எனக்கு அம்மாவாக நடிக்கும்வரையிலும் நான் நடிப்பேன்” என மேடையிலேயே சொன்னதுண்டு. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால என 25 வருடங்களாக காலத்தை ஓட்டி வருகிறார்.

Rajini

திருவிளையாடல் படத்தில் தருமி மண்டபத்தில் புலம்புவதைப் போல “அவர் வரமாட்டார் வரவேமாட்டார்” என பாதி நம்பிக்கையும் மீதி விரக்தியுமாக தமிழருவி மணியன் உள்ளிட்டோர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் ‘அரசியலுக்கு எல்லாம் ரஜினி சரிப்பட்டு வரமாட்டார்’ என காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி கொளுத்திப்போட, சம்பந்தமே இல்லாமல் பாஜகவின் பொன்னாருக்கு வந்ததே கோவம். “யார் அரசியலுக்கு வரணும், வரக்கூடாதுன்னு காங்கிரஸ் சர்ட்டிஃபிகேட் தர தேவையில்லை” என தமிழருவி மணியனுக்கும் முன்பாக முந்திக்கொண்டு ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். குளம் வத்தி கருவாடு சாப்பிடலாம் என நினைத்தால், குடல் வத்தி செத்த கொக்கு கதையாக இருக்கிறது பாஜகவின் நிலை. பாஜகவை நினைத்தால் பாவமாக இருக்கிறது, யாருக்காக இல்லேன்னாலும் பொன்னாருக்காகவாவது வந்திடுங்க ரஜினி!