அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது எப்போது தெரியுமா?

 

அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது எப்போது தெரியுமா?

அத்தி வரதர் சிலையின் உறுதித் தன்மை குறைவாக உள்ளது. அதைச் சரிசெய்த பிறகே அவர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் என்று தெரிகிறது. 

காஞ்சிபுரம்: அத்தி வரதர் வரும் ஆகஸ்ட் 1 ஆம்  தேதியிலிருந்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

athivaradhar

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதுவரை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்தி வரதரைத் தரிசித்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5  பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

athivaradhar

இந்நிலையில் காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அத்தி வரதர் வரும் ஆகஸ்ட் 1 ஆம்  தேதியிலிருந்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என்று தெரிவித்தார். 

athivaradhar

முன்னதாக 48 நாட்களில்  20 நாட்கள் சயன கோலத்திலும், 28 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்தி வரதர் காட்சியளிக்க இருந்த நிலையில்  தற்போது  சயன கோலத்திலேயே 23 நாள்கள் முடிவடைந்து விட்டது. காரணம் அத்தி வரதர் சிலையின் உறுதித் தன்மை குறைவாக உள்ளது. அதைச் சரிசெய்த பிறகே அவர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் என்று தெரிகிறது.