அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி!

 

அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி!

அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரிய வழக்குகளைச் சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி!

காஞ்சிபுரம்: அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரிய வழக்குகளைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அத்தி வரதர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். 

athivaradhar

அத்தி வரதர் தரிசனம் இன்றுடன் முடிவடையவுள்ள  நிலையில் நாளை அதிகாலையில் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோவில் வளாகத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்திற்குள் அத்தி வரதரை வைக்கப்படவுள்ளார். 

இந்நிலையில்  அத்தி வரதர் தரிசன நாட்களை மேலும் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கோவில் மரபு ,வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது, கோவில் நிர்வாகமும் அரசும் தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரிய வழக்குகளைத் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.