அத்தி வரதர் கோவிலின் ஐயங்கார்களுக்கிடையே பிரபந்தம் பாடுவதில் கைகலப்பு…!

 

அத்தி வரதர் கோவிலின் ஐயங்கார்களுக்கிடையே பிரபந்தம் பாடுவதில் கைகலப்பு…!

காஞ்சிபுரத்தில் உள்ள பெரும் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்  பூதத்தாழ்வார் சாத்து முறை உற்சவம் நடைபெறும்.

காஞ்சிபுரத்தில் உள்ள பெரும் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்  பூதத்தாழ்வார் சாத்து முறை உற்சவம் நடைபெறும். அந்த உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். அதே போல  இந்த ஆண்டும் இன்று  பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தில் சாத்துமுறை உற்சவத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவில் முழுவதும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று தேவராஜ பெருமானுக்கு ஆராதனைகள் நடைபெற்றன. 

Iyangar

இந்த கோவிலில் வடகலை ஐயங்கார்கள் மற்றும் தென்கலை ஐயங்கார்கள் என இரு பிரிவினர் உள்ளனர். இன்று நடைபெற்ற  பூதத்தாழ்வார் உற்சவத்தின் போது தென்கலை ஐயங்கார்கள்  பிரபஞ்சத்தைப் பாட ஆரம்பித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின் படி, பிரபஞ்சங்கள் பாட வேண்டாம் என்று வடகலை ஐயங்கார்கள் கண்டித்துள்ளனர். அதனையும் மீறி அவர்கள் பாடியதால், யார் பாடுவது என்று வடகலை மற்றும் தென்கலை ஐயங்கார்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் இரு தரப்பினரையும் பாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். 

Iyangar

அதனைக் கேட்க மறுத்த ஐயங்கார்கள் சேர்ந்து அவரவர் பிரபஞ்சங்களைப் பூதத்தாழ்வார் சாத்து முறை உற்சவத்தில் ஆவேசமாகப் பாடியுள்ளனர். இதனைக் கண்டு அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் இதே போல நடப்பதாகவும், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.