அத்தி வரதர் குறித்து பேசி சிக்கலில் சிக்கிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்: சம்மன் அனுப்பிய போலீசார்!

 

அத்தி வரதர் குறித்து பேசி சிக்கலில் சிக்கிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்: சம்மன் அனுப்பிய போலீசார்!

40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்தி வரதரால் மழை பொழிய ஆரம்பித்திருக்கிறது

அத்தி வரதர் குறித்து பேசி சிக்கலில் சிக்கிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்: சம்மன் அனுப்பிய போலீசார்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக காவல்துறையினர் அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி கடந்த 17 ஆம் தேதி முடிவுற்றது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

athivaradhar

இதனிடையே அத்தி வரதர் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்தி வரதரால் மழை பொழிய ஆரம்பித்திருக்கிறது. அதனால் அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது. அந்த காலத்தில் திருட்டு பயம் அதிகமாக இருந்ததால் அத்தி வரதரைக் குளத்தில் வைத்தனர். தற்போது அந்த பிரச்னை இல்லை  என்பதால் அனைவரும் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை கூற உள்ளோம். அத்தி வரதரை லட்சக்கணக்கோர் காண வருகின்றனர். திருப்பதியை விடப் புகழ் பெற்றதாக அத்தி வரதர் நிகழ்வு அமைந்துள்ளது. அதனால் தான் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது’ என்றார். 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி என்பவர் மத உணர்வைத் தூண்டும் வகையில் ஜீயர் பேசியதாக, முதல்வரின்  தனிப் பிரிவில் இணையம் வழியே புகார் அளித்தார். 
இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர காவல்நிலையத்தில் வரும் 22ம் தேதிக்குள், நேரில் ஆஜராகுமாறு ஜீயர் சடகோப ராமானுஜத்துக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.