அத்தி வரதரை குளத்தில் இறக்கும் பணி தொடங்கியது!

 

அத்தி வரதரை குளத்தில் இறக்கும் பணி தொடங்கியது!

அத்தி வரதரை  குளத்தில் இறக்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. 

அத்தி வரதரை குளத்தில் இறக்கும் பணி தொடங்கியது!

காஞ்சிபுரம் : அத்தி வரதரை  குளத்தில் இறக்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.  அதன்படி  அத்தி வரதர்  ஆகஸ்ட் 1ஆம் தேதி  முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இதனால் மக்கள் ஆர்வமுடன் அதிகாலையிலேயே ஆர்வமுடன் அத்தி வரதரை தரிசித்து விட்டு செல்கின்றனர். 

இதையடுத்து அத்தி வரதரை அமிர்த சரஸ் குளத்திற்குள் இறக்குவதற்கான பணிகள் நடைபெற உள்ளதால் 16-ம் தேதியே தரிசனம் நிறுத்தப்படும் என என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அத்தி வரதரை அமிர்த சரஸ் குளத்திற்குள் இறக்குவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளது. முதற்கட்டமாகக் குளத்தைச் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை 5 மணியுடன் விஐபி தரிசனம் நிறுத்தப்படும் நிலையில் 16 ஆம் தேதி அத்தி வரதர் குளத்தில் இறக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.