அத்திவரதர் ஆலயத்தின் முன் தீக்குளித்த ஆட்டோ டிரைவர்…அரைமணி நேரம் வேடிக்கை பார்த்த போலீஸ்…

அத்திவரதர் ஆலயத்தின் முன் தீக்குளித்த ஆட்டோ டிரைவர்…அரைமணி நேரம் வேடிக்கை பார்த்த போலீஸ்…

மிக பிரம்மாண்டமாக காஞ்சிபுரத்தில் நடந்துகொண்டிருக்கும் அத்திவரதர் வைபவத்தில் போலீஸாரின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஷேர் ஆட்டோ டிரைவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

athivardar

காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் 48 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அத்திவரதரை தரிசனம் செய்ய கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.இதனல் நகரில் சரித்திரம் காணாத கூட்டம் குவிந்துள்ளது.

இந்த அத்திவரதர் வைபவம் நடக்கும் நிலையில் நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் அனுமதி மறுத்ததாக புகார் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் கோவில் அருகே வாகனம் ஓட்ட சிறப்பு அனுமதி சீட்டு இருப்பதாக வாதிட்டிருக்கிறார். அவரது வாதத்தை போலீஸார் ஏற்றுக்கொள்ளாமல் அங்கிருந்து பிடிவாதமாக விரட்டி அனுப்பியுள்ளனர்.

fire

இதனால் டென்சனான அந்த டிரைவர் சற்று நேரத்தில் அதே ஸ்பாட்டுக்கு கையில் மண்ணெண்ணை கேனுடன் வந்து தீக்குளித்திருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீக்காயமடைந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்பொழுது ஆட்டோ ஓட்டுநர் குமார் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொள்ளும்போது போலீசார் யாரும் தடுக்கவில்லை எனவும், அவர் தீக்குளித்து அரைமணி நேரம் கழித்துத்தான் போலீசார் அவரை மீட்டு அவரது ஆட்டோவிலேயே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.