அத்திவரதரை காண வந்த 4 பேர் உயிரிழப்பு!

 

அத்திவரதரை காண வந்த 4 பேர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் அத்தி வரதரைத் தரிசிக்க வரிசையில் காத்திருந்த நான்கு பேர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தனர்.

காஞ்சிபுரம் அத்தி வரதரைத் தரிசிக்க வரிசையில் காத்திருந்த நான்கு பேர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவத்தின் பதினெட்டாம் நாளான இன்று பல மாநிலங்களிலிருந்து அதிக அளவில் மக்கள் வருகை தந்தனர். இன்று பெருமாளுக்கு உகந்த தினம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பக்தர்கள் உயிரிழந்தனர்.

சென்னையை ஆவடி பகுதியை சேர்ந்த சாந்தி (எ) நாராயணி, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த நடராஜன் , ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த  சேர்ந்த கங்கா லக்ஷ்மி மற்றும் சேலம் அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த  ஆனந்தவேல் ஆகியோர் உயிரிழந்தனர். இதில் ஆனந்த வேலுக்கு கூட்ட நெரிசல் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாகவும், அவரை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஐந்தாவது நபர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மருத்துமனையில் சீரியஸாக உள்ளார் என்ற தகவலும் அண்மையில் வெளியாகியுள்ளது. 

அத்திவரதரை தரிசிக்க சென்றபோது உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.