அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வந்தாலும் கையில் வசிப்பிட சான்றிதழ் இருக்கணும்…. தேவையில்லாமல் வெளியே சுற்றுவதற்கு செக் வைச்ச போலீஸ்…

 

அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வந்தாலும் கையில் வசிப்பிட சான்றிதழ் இருக்கணும்…. தேவையில்லாமல் வெளியே சுற்றுவதற்கு செக் வைச்ச போலீஸ்…

தெலங்கானாவில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வீட்டை வெளியே வந்தாலும் கையில் வசிப்பிட சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என தெலங்கானா போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு லாக்டவுனை மே 3ம் தேதி வரை நீட்டித்துள்ளது. தெலங்கானா அரசோ அதற்கு ஒரு படி மேலே போய் லாக்டவுனை மேலும் 4 நாட்கள் அதிகரித்து மே 7ம் தேதி நீட்டித்துள்ளது. அம்மாநிலத்தில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையை கணக்கில் கொண்டு லாக்டவுனை தெலங்கான அரசு நீட்டித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் மக்கள்

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெலங்கானா டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டி கூறியதாவது: தெலங்கானா அரசு லாக்டவுனை மே 7ம் தேதி வரை நீட்டித்துள்ளது. லாக்டவுனை கடுமையாக அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வீட்டை வெளியே வந்தாலும் கையில் வசிப்பிட சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 3 கி.மீட்டர் சுற்றளவை தாண்டி எந்தவொரு நபரும் வெளியே செல்லக்கூடாது என்பதை உறுதி செய்தவற்காக போலீசார் வெளியே வரும் மக்களிடம் சோதனை செய்வர்.

வாகன சோதனையில் தெலங்கானா போலீஸ்

அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவமனைகளுக்கு செல்லும் போது வசிப்பிட சான்று கையில் வைத்திருப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 6 விதமான கலர்களில் பாஸ் வழங்குமாறு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். கலர் பாஸ்களால் வேலை செல்லும் அரசு பணியாளர்களை போலீசாரால் அடையாளம் காண முடியும். இதுவரை லாக்டவுனை விதிமுறைகளை மீறியதாக 1.21 லட்சம் வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. அவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்படும். நாம் லாக்டவுனை திறம்பட அமல்படுத்தினால் மாநிலத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் வராது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.