அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதவர்கள் கீழ்கண்ட மாவட்ட நிர்வாகிகளை அணுகலாம் – உதயநிதி ஸ்டாலின்

 

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதவர்கள் கீழ்கண்ட மாவட்ட நிர்வாகிகளை அணுகலாம் – உதயநிதி ஸ்டாலின்

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.  இதனால் தமிழகம் உட்பட பெரும்பாலான இடங்களில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல , காய்கறிகள்  விலையும் உயர்ந்துள்ளது.  இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள், விலையை அதிகப்படுத்தி விற்று வந்தனர். இதனால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்கமுடியாமல் திணறிவருகின்றனர்.

 

 

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “அத்தியாவசிய தேவை கிடைக்காதோர் 93618 63559 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு உதவி பெறலாம்’ என அறிவித்தோம். அந்த எண்ணுக்கு ஆயிரக்கணக்கான அழைப்புகள் வருவதால் உதவிகள் சேர்வதில் தாமதம் ஏற்படுமோ என அஞ்சுகிறோம். இளைஞரணியின் கீழ்க்கண்ட மாவட்ட நிர்வாகிகளை நேரடியாக தொடர்புகொண்டு உதவிகளை பெறலாம்” என நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.