அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கக 200 பேருந்துகள் இயக்கம்!

 

அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கக 200 பேருந்துகள் இயக்கம்!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த கொடூரமான வைரஸால் தமிழகத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். பிரதமர் மோடி இந்தியா முழுவதிலும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத் தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் முறையாக பின்பற்றுகிரார்களா  என்று கண்காணிக்க காவல் படைகள் போடப்பட்டுள்ளன. 

ttn

ஊரடங்கு இருப்பினும் பால், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாசிய கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படியே, மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள நபர்களுக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதாவது துப்புரவு பாணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தலைமை செயலக பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்காக 200 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.