அத்திக்காய்,சுத்துக்கொழுப்பு ரோஸ்ட்!

அத்திக்காய்,சுத்துக்கொழுப்பு ரோஸ்ட்!

இது ஒரு கொங்கு ஸ்பெஷல்! குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அத்திக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்லது நடக்கும் என்று சொல்கிறார்கள்.
ஆனால்,அதனுடன் சுத்துக்கொழிப்பை சேர்த்து சாப்பிடுவதாய் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் பாக்கியம் இல்லாமல் இருக்க வேண்டும். எதற்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்,கொஞ்சம் டேஸ்ட் செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்.

athaikai

தேவையான பொருட்கள்.

சுத்தம் செய்த சுத்துக்கொழுப்பு 200 கிராம்
அத்திக்காய் ¼ கிலோ (இரண்டாக வெட்டி விதைகளை களைந்து வைக்கவும்)
பூண்டு 10 பல்
இஞ்சி 2 இஞ்ச் துண்டு 
சின்ன வெங்காயம் 100 கிராம்
தக்களி 1 ( பொடியாக வெட்டியது )
மஞ்சள் தூள்
மல்லித்தூள் 
மிளகாய் தூள்
கரம் மசாலா தூள் 
பொடித்த மிளகு சீரகம்
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

எப்படிச் செய்வது.

அடுப்பில் சட்டியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை போட்டு தளியுங்கள்.அதில் இஞ்சி மற்றும் பூண்டுப் பற்களை தட்டிப் போடுங்கள்.ஒரு நிமிடம் அவற்றை எண்ணெயில் வதக்கி விட்டு சின்ன வெங்காய்த்தையும் சிறிதளவு உப்பும் சேர்த்து மறுபடி வதக்குங்கள்.
எண்ணெய் பிரிந்து வரும்போது தக்காளியைச் சேர்த்து புரட்டி விட்டு ,
சுத்தம் செய்திருக்கும் சுத்துக் கொழுப்பை சேருங்கள்.

athaikai

கொழுப்பு உருகி சிறு சிறு துண்டுகளாகத் திரளும்போது, உப்பு, மஞ்சள்தூள், மல்லித்தூள்,மிளகாய்தூள் சேர்த்து கிளறி விடுங்கள்.ஐந்து நிமிடத்துக்குப் பிறகு,வெட்டி விதை நீக்கம் ( முடிந்தவரை) செய்து வைக்கப்பட்டு இருக்கும் அத்திக்காயை சேர்த்து மறுபடி கிளரிவிட்டு,ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து 
மூடியைப் போட்டு சட்டியை மூடுங்கள்.

அடுப்பை ஐந்துநிமிடம் சிம்மில் வைத்து மூடியைத் திறந்து,பொடித்து வைத்திருக்கும் மிளகு ,சீரக பொடியை தூவி லேசாக கிளரிவிட்டு அடுப்பை அனைத்து விடுங்கள்.இப்போது,சுத்துக்கொழுப்பு, அத்திக்காய் ரோஸ்ட் ரெடி!.