அதே 123 (7) ஏ: இந்தியாவில் மீண்டும் எமர்ஜென்சி?

 

அதே 123 (7) ஏ:  இந்தியாவில் மீண்டும் எமர்ஜென்சி?

ஒற்றை ஆட்சி முறைக்கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது என்றுத தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், “இந்திராவைப் போல மோடியும் எமர்ஜென்சியை கொண்டு வருவாரோ” என்ற  யூகம் எழுந்துள்ளது.

ஒற்றை ஆட்சி முறைக்கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், “இந்திராவைப் போல மோடியும் எமர்ஜென்சியை கொண்டு வருவாரோ” என்ற  யூகம் எழுந்துள்ளது.
 
இது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலர் தெரிவிப்பதாவது: “1971ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது.  இந்திரா காந்தி,  ரேபரேலி தொகுதியில்  வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த  ராஜ் நரேன்,  தேர்தல் முடிவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.

indhra

 
அவர் தனது மனுவில், “தேர்தல் துவங்கும் முன்னர்,  இந்திரா காந்தி தனது பிரச்சார நிர்வாகியாக  யஷ்பால் கபூர் என்ற அரசு அதிகாரியை நியமித்தார். அந்த அதிகாரியின் உத்தரவின் பேரில் , இந்திரா காந்தியின்  பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு உள்ளூர் (மாநில) அதிகாரிகள் உதவி செய்தனர்.  கூடுதல் காவல்துறை பாதுகாப்பும் இந்திரா காந்திக்கு அளிக்கப்பட்டது.  இது தேர்தல் சட்டத்தின் 123(7)(ஏ) விதியை மீறிய குற்றமாகும். ஆகவே, இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று தனது மனுவில் குறிப்பிட்டார்.
 
இந்திராகாந்தி தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், “இந்திரா காந்தியின் பிரச்சார நிர்வாகியாக செயல்பட்ட யஷ்பால் கபூர், தனது அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதன் பிறகே இந்திராகாந்திக்காக செயல்பட்டார்.  ஆனால், அரசு நிர்வாக நடைமுறையின் வழக்கமான மெத்தனத்தால், அவரது ராஜினாமாவை ஏற்று விடுவிப்பு ஆணை பிறப்பிக்க  தாமதம் ஆகிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

indra

 
இது குறித்து இரு தரப்பு வாதத்தையும் கேட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம் “பிரதமராக இருந்தாலும், தேர்தல் நடைமுறையப் பொறுத்தவரை, இந்திராகாந்தியு்ம் ஒரு வேட்பாளர்தான். அவர் தனது பிரச்சாரத்துக்காக  அரசு அதிகாரியை நியமித்துக்கொண்டது சட்டப்படி தவறு.  ஆகவே, இந்திரா காந்தி  வெற்றி பெற்றது  செல்லாது” என்று தீர்ப்பளித்தது. 1975 ஜூன் 12ம் தேதி இத் தீர்ப்பு  வெளியானது.இது இந்தியா முழுவதையும் அதிரவைத்தது.
 
இத்தீர்ப்பை எதிர்த்து இந்திராகாந்தி மேல் முறையூடு செய்தார். ஆனால் அவர்  ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டங்களை நடத்தின.இந்த நிலையல் இந்திரா காந்தி, “தற்போதுதான் பாகிஸ்தானுடனான போர் முடிவடைந்திருக்கிறது, நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. இந்த நிலையில் அரசு பணியாளர்களின் போராட்டங்கள் நாட்டை சீர்குலைக்கும்” என்று தெரிவித்த இந்திராகாந்தி, எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.
 

modi

இனி தற்போதைய நிலவரத்துக்கு வருவோம்.“அரசு அதிகாரியை தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டார் இந்திரா” என்று 1971ல் புகார் எழுந்ததைப் போலவே, தற்போது பிரதமர் நரேந்திரமோடி மீதும் புகார் எழுந்துள்ளது.
 
அதாவது, நாடு முழுதும் அவர் எங்கெங்கு தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்கிறாரோ அந்தப் பகுதியின் பெருமைகள், பிரச்சினைகள்  குறித்து தொகுப்பாக அனுப்புமாறு நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகம் ஆணையிட்டுள்ளது.
 
கடந்த ஏப்ரல் 8ம் தேதி இந்த இந்த உத்தரவை நிதி ஆயோக்கின் பொருளாதார அதிகாரி பிங்கி கபூர்  நாடு முழுதும் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
 

“தேர்தலுக்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்தக் கூடாது என்கிற விதியை மீறிவிட்டார் பிரதமர் மோடி. ஆனால் இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி தற்போது இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
 

ec

 

அதாவது, தேர்தலின் போது அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தக் கூடாது என்கிறது  மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123(7)(ஏ)  பிரிவு.இதே பிரிவின் கீழ்தான் இந்திராகாந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்த வழக்கில் தனக்கு வெற்றி கிடைக்காத நிலையில்தான் எமர்ஜென்சியை கொண்டுவந்தார் இந்திரா காந்தி.
 
அதே 123(7)(ஏ)  பிரிவின் கீழ்தான் தற்போது பிரதமர் மோடியின் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது குறித்த வழக்கில் தனக்கு வெற்றி கிடைக்காவிட்டால் மோடியும் எமர்ஜென்சியை கொண்டு வருவாரோ என்கிற யூகம் அரசியல் நோக்கர்கள் சிலரிடையே எழுந்துள்ளது.

modi

 
இந்த அரசியல் நோக்கர்கள், “மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்புக்கு வந்ததில் இருந்து மாநில அரசின் அதிகாரங்களைப் பறித்து ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவரத் திட்டமிடுகிறது. 
 
ஜி.எஸ்.டி. மூலம் மாநில அரசின் வரி விதிக்கும் அதிகாரம், நீட் மூலம் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் மாநில அரசுக்கு இருந்த அதிகாரத்தையும் பறித்தது. இதே போல உயர் கல்வி ஆணையம் கொண்டு வந்தது. நிதி ஆயோக் என்கிற அமைப்பை பாஜக அரசு கொண்டுவந்ததும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதற்கே. இப்படி தொடர்ந்து மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வர முயலும் மத்திய மோடி அரசு, எமர்ஜென்சியை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்கிறார்கள்.