அதே டெய்லர் அதே வாடகை, திருந்துங்க நிதின் கட்கரி ஜி!

 

அதே டெய்லர் அதே வாடகை, திருந்துங்க நிதின் கட்கரி ஜி!

ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் தருவோம் என்பதெல்லாம் சும்மா, லோலாயிக்கி சொன்னோம்” என நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இதே கட்கரி ஒரு தொலைகாட்சி பேட்டியில் சொன்னார்.

சிறு, குறுந்தொழில்கள் மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 100 தொழில்முனைவோர் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் “இன்று” அதாவது கி.பி. 2019ஆம் ஆண்டு, ஜுன் மாதம், 14ஆம் தேதி, பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய கட்கரி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, ஐடியா பேங்க் அதாவது Bank of Idea and Innovation ஒன்று துவங்கப்படும் என்றும், இதற்கென தனியாக ஒரு இணையதளம் “அடுத்த வாரம்” துவங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Nitin Gadkari

அடடா, நல்ல முயற்சி, வாழ்த்துகள் என்றுதானே தோன்றுகிறது. இங்கேதான் இருக்கிறது ஒரு ட்விஸ்ட், ஃப்ளாஷ்பேக் வடிவில். அது 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி. டெல்லியில் ஒரு மாநாடு. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஒரு விழாவில் கலந்துகொள்கிறார். இதே கட்கரி அப்போதும் மத்திய அமைச்சர்தான். என்ன விழா என்றால், “Bank of Idea and Innovation” துவக்க விழா!

Kalam with Gadkari

என்னய்யா பித்தலாட்டமா இருக்குங்கிறீங்களா? விழாவில் கட்கரி கலந்துகொண்டதும், காலம் சென்ற அப்துல் கலாம் கலந்துகொண்டதும் அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ பத்ரிகை குறிப்பில் உள்ளது. “ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் தருவோம் என்பதெல்லாம் சும்மா, லோலாயிக்கி சொன்னோம்” என நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இதே கட்கரி ஒரு தொலைகாட்சி பேட்டியில் சொன்னார். ஆக, இவர்கள் சொன்னது எல்லாம் வைத்துப் பார்த்தால், 15 லட்சம் மட்டுமல்ல, சொல்வது அத்தனையுமே லோலாய்க்கித்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லியாகிவிட்டது. ஆதாரங்கள் தந்தாகிவிட்டது. கட்கரிக்கு முட்டு குடுப்பவர்கள் குடுக்கலாம்.