‘அதெல்லாம் ஒன்றும் வராது’: பிரதீப் ஜான் கருத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மறுப்பு!

 

‘அதெல்லாம் ஒன்றும் வராது’:  பிரதீப் ஜான் கருத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மறுப்பு!

வடகிழக்கு பருவமழையில் ஏற்பட்டுள்ள இடைவெளி காரணமாக  தமிழகத்தில்  அடுத்தவாரம் காற்று மாசு அதிகரித்துக் காணப்படும்

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு  தமிழகத்துக்கும் பரவும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

pradeep

டெல்லியில் கடந்த  ஒரு வாரமாக  காற்று மாசுபாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதே பிரச்னை தமிழ்நாட்டுக்கும் வரப்போவதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு கிழக்கு கடற்கரை பகுதி வழியாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பரவும் என்றும் வடகிழக்கு பருவமழையில் ஏற்பட்டுள்ள இடைவெளி காரணமாக  தமிழகத்தில்  அடுத்தவாரம் காற்று மாசு அதிகரித்துக் காணப்படும்’ என்று பதிவிட்டிருந்தார். 

delhi

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் பாலசந்திரனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாட்டுக்கும் இடையே இடைவெளி அதிகம். அதனால் இவை இரண்டும் வெவ்வேறு அட்சரேகையில் உள்ளன. மேலும் இடையில் மலைப்பகுதிகள் இருக்கின்றன. இதனால் தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கிலிருந்து வீசுவதால் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு தமிழ்நாட்டை பாதிக்காது’ என்றார்.