அதெப்புடிப்பா கொஞ்சம்கூட‌ கூசாம இப்புடி அடிச்சு விடுற?

அரையிறுதியில் பாகிஸ்தான் நுழைந்து, 500 ரன்களோ அல்லது 600 ரன்களோ குவித்து 316 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால், முதலில் டாஸ் ஜெயிக்க வேண்டும். டாஸ் ஜெயித்து பேட்டிங்கை எடுக்கவேண்டும். ஒருவேளை வங்கதேசம் டாஸ் ஜெயித்தால், ஆட்டமே ஆடத்தேவையில்லை. நேராக ஏர்போர்ட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்.

பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் வலுவான அணியாக கருதப்படும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 330 ரன்களையும், யூகிக்கவே முடியாத மற்றொரு அணியான‌ வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் 321 ரன்களை 42ஆவது ஓவரிலேயே எடுத்து விஸ்வரூபம் காட்டிய மாஸ் அணியான வங்க தேச அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 600 இல்லேன்னா குறைந்தபட்சம் 500 ரன்களாவது எடுப்போம் என பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் சிரிக்காமல் கூறியிருக்கிறார்.

Sarfraz

பிரச்னை என்னன்னா, பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைவது குதிரைக்கொம்பாகிவிட்டது. வங்க தேச அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவர்களுக்கு இரு சவால்கள் உள்ளன. முதல் சவாலை பிறகு பார்ப்போம். இரண்டாவது சவால், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து குறைந்தபட்சம் 316 ரன்களில் வெற்றி பெறவேண்டும். கவனிக்கவும், 316 ரன்கள் வித்தியாசத்தில். அதாவது, பாகிஸ்தான் 500 ரன்கள் குவித்தால், வங்கதேச அணியை 180 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். வங்கதேச அணி இருக்கும் ஃபார்மை பார்த்தால், பாகிஸ்தான் அணிதான் 180 ரன்களுக்குள் சுருண்டுவிடும். சரி, அந்த முதல் சவால் என்ன? அரையிறுதியில் பாகிஸ்தான் நுழைந்து, 500 ரன்களோ அல்லது 600 ரன்களோ குவித்து 316 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால், முதலில் டாஸ் ஜெயிக்க வேண்டும். டாஸ் ஜெயித்து பேட்டிங்கை எடுக்கவேண்டும். ஒருவேளை வங்கதேசம் டாஸ் ஜெயித்தால், ஆட்டமே ஆடத்தேவையில்லை. நேராக ஏர்போர்ட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்.