அது வேற இது வேற – மம்தா பானர்ஜி தெளிவு

 

அது வேற இது வேற – மம்தா பானர்ஜி தெளிவு

திருணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார். அதுபோலவே, தேர்தலில் பெருவெற்றி கண்டவுடன், திருணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவியுள்ளனர்.

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்திருப்பதாகவும், முடிந்தவரை டெல்லி சென்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க முயற்சிப்பதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். “பிரதமர் பதவியேற்புக்கு மாநில முதல்வர்கள் அழைக்கப்படுவது அரசியல் சாசனம் தந்துள்ள உரிமை, அதில் பங்கேற்பது கடமை” என்று மம்தா தெரிவித்துள்ளார்.

Modi swearing in ceremony

தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடிக்கும் முதல்வர் மம்தாவுக்கும் இடையே அனல்தெறிக்கும் சவால்கள் நிறைந்து இருந்தன. திருணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார். அதுபோலவே, தேர்தலில் பெருவெற்றி கண்டவுடன், திருணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவியுள்ளனர்.

பதவியேற்புக்கு முன்பாகவே, எம்.எல்.ஏக்கள் அணி மாறுவது தொடங்கிவிட்டதால், பாஜக இன்னும் முழுவேகத்துடன் திருணாமூல் காங்கிரஸை உடைக்கும் வேலையைச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், மம்தா தனது அரசியல் சாசன கடமையுணர்ந்து, பிரதமரின் பதவியேற்பில் பங்கேற்க இருப்பது பாராட்டுக்குறியது!