அது மட்டும் நடக்கவில்லை என்றால் எல்லாமே போயிடும்… உதறலில் எடப்பாடி..!

 

அது மட்டும் நடக்கவில்லை என்றால் எல்லாமே போயிடும்… உதறலில் எடப்பாடி..!

2016 தேர்தலில் இந்தத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களை மீண்டும் நிறுத்தினால் என்ன என்ற எண்ணமும் எடப்பாடி பழனிசாமிக்கு, கூட்ட முடிவில் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

விக்கிரவாண்டி. நாங்குநேரி இடைத் தேர்தலில் திமுகவின் விக்கிரவாண்டி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எப்போதும் தேர்தல் பணிகளில் முந்திக்கொள்ளும் அதிமுக, வேட்பாளர்கள் யார் என்பதை நேற்றுவரை அறிவிக்கவில்லை.

90 பேரே ஆளுங்கட்சி சார்பில் விருப்ப மனு கொடுத்திருந்தாலும் அவர்களில் வெறும் 12 பேரை மட்டும்தான் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நேர்காணல் செய்தார்கள். மீதம் உள்ள 78 பேரையும் தலைமைக் கழகத்தின் கூட்டம் நடக்கும் ஹாலில் வரிசையாக அமரவைத்து விட்டு மற்றொரு அறையில் நேர்காணல் நடத்தப்பட்டது.

நேர்காணல் முடித்த நிலையில் அந்த 78 பேரிடமும் தேடிவந்த பழனிசாமியும் பன்னீர் செல்வமும், ‘வாய்ப்பு கிடைக்காதவங்க சோர்ந்து போயிடக் கூடாது. டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் வருது. அதுல உங்க எல்லாருக்கும் பதவி உண்டு. இதை மனசில வெச்சிக்கிட்டு எந்த தொய்வும் இல்லாமல் தேர்தல் வேலை பார்க்கணும். இடைத் தேர்தல்ல ஜெயிச்சா தான் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தலை காட்ட முடியும் என்பதை நம் மனத்தில் வைத்து தேர்தல்ல தீவிரமாகச் செயல்படணும். இடைத்தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் எல்லாம் போய் விடும்’ என்று தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் வேட்பாளர் நேர்காணலுக்கு மொத்தம் 12 பேர்களே அழைக்கப்பட்டாலும் போட்டி கடுமையாக இருந்திருக்கிறது. அதுவும் நாங்குநேரியை விட விக்கிரவாண்டியில்தான் அதிக போட்டி.

பேசாமல் 2016 தேர்தலில் இந்தத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களை மீண்டும் நிறுத்தினால் என்ன என்ற எண்ணமும் எடப்பாடி பழனிசாமிக்கு, கூட்ட முடிவில் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இன்று காலை அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விடக்கூடும்.