அது பிக்பாஸ் வீடா?! இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா?! பிரபல நகைச்சுவை நடிகர் ட்வீட்!

 

அது பிக்பாஸ் வீடா?! இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா?! பிரபல நகைச்சுவை நடிகர் ட்வீட்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து பிரபல நடிகர் சதீஷ் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து பிரபல நடிகர் சதீஷ் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பல்வேறு பிரபலங்களும் ரசித்துப் பார்த்து வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானவர் என்றால் நடிகர் சதீஷ் தான். பிக்பாஸின் கடந்த சீசன்களையும் பார்த்து ரசித்த அவர் ஜூலி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் குறித்து ட்வீட் செய்தார். 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனையும் பார்த்து வருகிறார். அதில் பங்குபெற்றுள்ள லாஸ்லியா குறித்து சமீபத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக தற்போது ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார் . அதில், ‘அது பிக்பாஸ் வீடா அல்லது அந்த ஒருத்தருக்குச் சொந்தமான வீடா என கேட்டுள்ளார். மேலும் அந்த ஒருத்தர் யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கபா’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சதிஷ் மறைமுகமாக வனிதாவைத் தான் சொல்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.