அது அவரின் சொந்த கருத்து” -ஆமா, அவங்களேதான்

 

அது அவரின் சொந்த கருத்து” -ஆமா, அவங்களேதான்

“கோட்சே தேசாபிமானியாக இருந்தார், இருப்பார்” என பாஜகவின் போபால் வேட்பாளர் பிரக்யா தாகூர் வெளியிட்ட கருத்துக்கு அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

.”கோட்சே தேசாபிமானியாக இருந்தார், இருப்பார்” என பாஜகவின் போபால் வேட்பாளர் பிரக்யா தாகூர் வெளியிட்ட கருத்துக்கு அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார் இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள நரசிம்ஹ ராவ் (அட இவரு அந்த ராவ் இல்லீங்க, அவரு மர்கயா, இந்த ராவ் பாஜக ராவ்) “பாஜக இந்த கருத்தை ஏற்கவில்லை, நாங்கள் இதனை கண்டிக்கிறோம், இதுகுறித்து பிரக்யாவிடம் விளக்கம் கேட்கப்படும், இந்த கருத்தை வெளியிட்டதற்காக பொதுவெளியில் பிரக்யா மன்னிப்பு கேட்கவேண்டும்” என்றெல்லாம் மீட்டருக்கு மேல் பேசி இருக்கிறார் ராவ்.

takur

பிரக்யாவின் இந்த கருத்துக்கு  காங்கிரசின் திக் விஜய் சிங் பதில் அளிக்கையில், “கோட்சேவை புனிதப்படுத்திப் பேசுவது தேசபற்று ஆகாது, அது தேச விரோத செயலாகும்” என தடாலடியாக தெரிவித்ததும், சமூக வலைதளங்களில் பாஜக மீதும் பிரக்யா மீதும் கடுமையான விமர்சனம் எழுந்ததும், பாஜகவும் வேறு வழியில்லாமல் வெள்ளை கொடி காட்டிவிட்டது.

பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் அவரவர் இஷ்டத்துக்கு தேச விரோத கருத்துகளையும், வன்முறை பேச்சுகளையும், பிற சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசுவதும், அதன்பின் கட்சி தலைமையில் இருந்து யாரேனும் ஒருவர் வந்து, “அது அவரின் சொந்த கருத்து” என கதவை சாத்துவதும் வாடிக்கைதானே? தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசிய பேச்சுகளை எல்லாம் தொகுத்து புத்தகமாக எழுதினால், “அது ஹெச். ராஜாவின் சொந்த கருத்து” என எத்தனை முறை ஜகா வாங்கியுள்ளார் என்பதற்காக தனியே ஒரு 30 பக்கங்கள் ஒதுக்கலாம்.