‘அதுக்கு இணங்காதீங்க’, அப்புறம் வருத்தப்படுவீங்க: நடிகைகளுக்கு டாக்டர் ஷாலினி அலாரம்!

 

‘அதுக்கு இணங்காதீங்க’, அப்புறம் வருத்தப்படுவீங்க: நடிகைகளுக்கு டாக்டர் ஷாலினி அலாரம்!

பாலியல் அழைப்புக்கு இடம் கொடுக்காவிட்டாலே அப்படிப்பட்ட தொல்லைகளுக்கு நடிகைகள் ஆளாக மாட்டார்கள் என்று மனநல மருத்துவர் ஷாலினி கூறியுள்ளார்.

சென்னை: பாலியல் அழைப்புக்கு இடம் கொடுக்காவிட்டாலே அப்படிப்பட்ட தொல்லைகளுக்கு நடிகைகள் ஆளாக மாட்டார்கள் என்று மனநல மருத்துவர் ஷாலினி கூறியுள்ளார்.

திரையுலகில்  வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகைகள் பலர், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றச்சாட்டி வருகின்றனர். ஆனாலும் பெண்கள் தொடர்ந்து சினிமா துறையையே நாடி செல்லும் நிலையும் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும், தொடர்நிலையாக தான் இருக்கின்றன.

shalini

இது குறித்து மனநல மருத்துவர் ஷாலினியிடம் நாம் கேட்டபோது அவர் கூறியதாவது;- ‘ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை இருக்கும். உதாரணமாக அறிவியல் துறையை எடுத்துகிட்டீங்கன்னா, பெண்கள் அந்த துறைக்கு தங்கள் அறிவை முதன்மையாக  வைத்து வருவார்கள். ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது அவரது திறமையை பொறுத்தது. உதாரணமாகச் சட்ட, மருத்துவ துறைகளை எடுத்துக்கிட்டா, என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதணும். ஆனா, சினிமாவுக்கு அதெல்லாம் தேவையில்ல. நடிப்பு துறையில் இருக்கும் ஆண்கள் மீது இருக்கின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு என்னென்னா, அந்த துறையில் இருக்கும் ஆண்கள் தான் மிகவும் பிற்போக்குத்தனமான, ஆண்களாக இருக்கிறார்கள். ஒரு பெண் ஒரு குற்றச்சாட்டை சொன்ன கூட, ஒட்டுமொத்தமாக சேர்ந்துக்கிட்டு, அவ எப்படி தெரியுமா? என்ன பண்ணான்னு தெரியுமான்னு திசை திருப்ப பார்க்குறாங்க.

அதே நேரத்தில் திரைத்துறை பெண்கள் மீது இருக்கும்  குற்றச்சாட்டு என்னென்னா, அவர்களும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.ஒரு மிகப்பெரிய கதாநாயகி சொல்லுவாங்க, திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டா! கிடையவே கிடையாது,  அப்படினு சொல்லுவாங்க. ஆனால் தினசரி நாம அதை தான் கேள்விப்படுகிறோம். அது அப்பட்டமாக தெரியும். அதை அவங்க தான் களைந்து  எடுக்கவேண்டுமே தவிர, வெளியில் இருக்குறவங்க போய் கைகொடுக்க முடியாது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த அத்துறையில் இருக்கும் பெண்கள், பவர்லெஸாக இருக்கிறார்கள். அபலைகளாகவும், வெறும் அவங்க அழகை வைத்து தான் பிழைக்கிறார்கள் என்பதால் இயல்பாகவே அவர்கள் டபுள் பவர்லெஸாக இருக்கிறார்கள். அதை ஆண்கள் பயப்படுத்திக்கிறாங்க.

வரம்புமீறி நடந்துக்கிட்டா நாங்க நடிக்க மாட்டோம் என்று திரையுலகை நாடி வரும் பெண்கள் தைரியமா சொல்லணும். அப்படி சொல்லும் போது  ஆண்களால என்ன பண்ண முடியும். ஆனால் அப்படி சொல்லக்கூடிய சூழலில் பெண்கள் இல்லையே. எந்த முதலீடும் இல்லாமல்,  ஜெயிக்கக்கூடிய துறையாக அந்த துறை இருப்பதால் பெண்கள் அதை நோக்கி போறாங்க. ஆனால்  அந்த பெண்களுக்கும் நாம தான் குரல் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது’ என்றார்.