அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை…. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுபாஸ் சந்திர கார்க்….

 

அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை…. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுபாஸ் சந்திர கார்க்….

தனது விருப்பு ஓய்வு முடிவுக்கும், பணியிட மாற்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என மத்திய நிதி அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சுபாஸ் சந்திர கார்க் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளராக பணிபுரிந்து வந்த சுபாஸ் சந்திர கார்க் அண்மையில் மின்சக்தி அமைச்சகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் சுபாஸ் சந்திர கார்க் விருப்பு ஓய்வு கேட்டு விண்ணப்பம் செய்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மின்சார துறைக்கு இடமாற்றம் செய்தது பிடிக்காமல்தான் விருப்பு ஓய்வு முடிவை அவர் எடுத்ததாக செய்தி வெளியானது. அவரும் எதுகுறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மத்திய நிதியமைச்சகம்

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுபாஸ் சந்திர கார்க் தற்போது விருப்பு ஓய்வு குறித்து வாய் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: எனது விருப்ப ஓய்வு குறித்து இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவித்தேன். கடந்த 18ம் தேதி விருப்ப ஓய்வு குறித்து பிரதமர் அலுவலகத்துடன் ஆலோசித்தேன்.

பிரதமர் அலுவலகம்

அதற்கு பிறகுதான் பணியிட மாற்றம் வந்தது. அதனால் விருப்பு ஓய்வுக்கும் பணியிடமாற்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. விருப்பு ஓய்வு கேட்டு முறைப்படி கடந்த 24ம் தேதி விண்ணப்பம் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். மின்சக்தி துறை செயலாளராக தற்போது சுபாஸ் சந்திர கார்க் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.