அதி தீவிர புயலாக மாறிய கஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது!

 

அதி தீவிர புயலாக மாறிய கஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது!

அதிதீவிர புயலாக மாறியுள்ள கஜா இன்று மாலை கடலூர் – பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: அதிதீவிர புயலாக மாறியுள்ள கஜா இன்று மாலை கடலூர் – பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னைக்கு தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு தென் கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் கஜா புயல் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல், இன்று மாலை அல்லது இரவு வாக்கில் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை, கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கஜா புயலின் தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மீட்புப்பணிகளுக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. சிதம்பரத்தை அடுத்த கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளான கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், மாறாமலை போன்ற பகுதிகளிலும் மற்றும் கடலோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.