அதிவேக இன்டர்நெட் இல்லாமல் அல்லாடும் காஷ்மீர்! ஐந்து மாதமாக முடங்கியிருக்கும் மக்கள் 

 

அதிவேக இன்டர்நெட் இல்லாமல் அல்லாடும் காஷ்மீர்! ஐந்து மாதமாக முடங்கியிருக்கும் மக்கள் 

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்து பறிக்கப்பட்டது. இதையடுத்து, காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது. இதனால், காஷ்மீர் முழுவதும் பல போராட்டங்கள் வெடித்தது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்து பறிக்கப்பட்டது. இதையடுத்து, காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது. இதனால், காஷ்மீர் முழுவதும் பல போராட்டங்கள் வெடித்தது. நிலைமையை கட்டுக்குள் வர காஷ்மீர் முழுவதும் இணையசேவை துண்டிக்கப்பட்டது. அங்குள்ள மக்களின் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

article-370-protest

சமீபத்தில் ஸ்ரீநகருக்கு வருகை தந்த வெளிநாட்டு பிரதிநிதிகள், காஷ்மீரில் மீண்டும் அதிக வேக இணைய சேவையை வழங்க பரிந்துரைத்துள்ளனர். “2 ஜி இன்டர்நெட் வைத்துக்கொண்டு தங்களால் மெயில்களைக் கூட செக் பண்ண முடியவில்லை இதற்கு இன்டெர்னட் இல்லாமல் இருப்பதே மேல்” என்று அம்மக்கள் குற்றம் சாட்டினர். அனுமதிக்கப்பட்ட 300 தளங்களைத் தவிர மற்ற எந்த தளத்தையும் பயன்படுத்த முடியவில்லை  என்றும், சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் மக்கள் தெரிவித்தனர்.

பிராட்பேண்ட் மற்றும் அதிவேக இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் பிற தொழில் செய்வோரும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 ஜி மொபைல் சேவை தங்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாது என்று ஊடக நபர்கள் மற்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.