அதிவேகமாக வந்த பைக் மோதி விபத்து..கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு!

 

அதிவேகமாக வந்த பைக் மோதி விபத்து..கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு!

அகிலாவின் ஆசையை நிறைவேற்ற கடுமையாக உழைத்து, மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்மணி என்பவரது மகள் அகிலா. டெய்லராக இருந்து வரும் தமிழ்மணி, மருத்துவராக வேண்டும் என்ற அகிலாவின் ஆசையை நிறைவேற்ற கடுமையாக உழைத்து, மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளார். பெரும் கஷ்டங்களுக்கு இடையே 5 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்த அகிலா, கடந்த ஓராண்டு காலமாக பயிற்சி மருத்துவராக இருந்து வந்துள்ளார். அவரின் பயிற்சி காலம் கடந்த மார்ச் மாதம் முடிந்த நிலையில், கொரோனா தடுப்பு பணி காரணமாக அவரது பணி மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

ttn

இதனையடுத்து கடந்த வாரம் தனது பயிற்சி படிப்பின் சான்றிதழை பெற தனது நண்பர் பிரபஞ்சனுடன் பைக்கில் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். சான்றிதழ் பெற்றுக் கொண்டு திரும்பும் வழியில், எதிரே வேகமாக பைக்கை ஓட்டிக் கொண்டு வந்த கருப்பணன் அகிலா சென்ற பைக் மீது மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அகிலா மற்றும் பிரபஞ்சன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அகிலா இன்று உயிரிழந்துள்ளார்.  

பெரும் இன்னல்களுக்கிடையே மருத்துவ படிப்பை முடித்து, மருத்துவராக பணியாற்ற வேண்டும் என்ற கனவு நிறைவேறாமலே உயிரிழந்த அகிலாவின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகிலாவின் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் என அகிலாவின் நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.