அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் துலா கட்டம்! பாவம் கரைக்க கங்கையே தேடி வருகிறாள்! மிஸ் பண்ணாதீங்க!

 

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் துலா கட்டம்! பாவம் கரைக்க கங்கையே தேடி வருகிறாள்! மிஸ் பண்ணாதீங்க!

ஐப்பசி மாதம் துவங்கி விட்டது. அடைமழையையும் ரசித்து வருகிறோம். இந்த ஐப்பசி மாதத்தில் தான் சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். அப்படி சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால், இந்த மாதத்தை துலா மாதம் என்றழைக்கிறோம். துலா என்றால் தராசு…ஐப்பசி மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருப்பதால், துலா மாதம் என்று கூறுகிறோம்.

ஐப்பசி மாதம் துவங்கி விட்டது. அடைமழையையும் ரசித்து வருகிறோம். இந்த ஐப்பசி மாதத்தில் தான் சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். அப்படி சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால், இந்த மாதத்தை துலா மாதம் என்றழைக்கிறோம். துலா என்றால் தராசு…ஐப்பசி மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருப்பதால், துலா மாதம் என்று கூறுகிறோம். இந்த ஐப்பசி மாதத்தில் தான் கங்கை, யமுனை, நர்மதா, சிந்து போன்ற நதிகள் எல்லாம் காவேரி நதிக்கு வந்து அவர்களின் பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்வதாக ஐதீக்ம். அப்படி பெயர் பெற்ற நதிகள் எல்லாம் காவேரியைத் தேடி பாவம் தீர்க்க வரும் போது, மனிதர்களின் பாவங்களையா காவேரி தாய் தீர்க்க மாட்டாள்?

thula

ஒரு முறை கங்கா நதி பிரம்மாவிடம், எல்லோரும் தன்னிடம் வந்து தமது பாவங்களைத் போக்கிக் கொள்வது போல தான் எங்கே போய் தனது பாபங்களைப் போக்குவது என்று கேட்டாள்.  பிரம்மாவும், கங்கை முதலான எல்லா நதிகளும் துலா மாதத்தில் காவிரிக்குச் சென்று தமது பாவங்களை களையலாம் என்று கூறினாராம். இந்த ஐப்பசி மாதத்தில் மகாநதிகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பாப விமோசனம் அருள்கிறாள் காவிரி. இந்த மாதத்தில் காவிரி நதியில் குறைந்த பட்சமாக மூன்று நாட்களாவது ஸ்நானம் செய்வது மிகுந்த நற்பலனைத் தரும் என்று கூறியுள்ளனர். காவேரி மஹாத்மியத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்பென்றாலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச் சிறப்பு.