அதிர்வை ஏற்படுத்தப்போகும் படங்கள்!!!

 

அதிர்வை ஏற்படுத்தப்போகும் படங்கள்!!!

“மே 22 – ஒரு சம்பவம்“ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஜனவரி 24-ம் தேதியன்று ஸ்விட்சர்லாந்து, டாவோஸ்ஸில் உள்ள புகழ்பெற்ற உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது

அஹிம்சா புரோடக்ஷ்ன்ஸ் தங்களது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படத்திற்கு “மே 22 – ஒரு சம்பவம்“ எனப் பெயர் சூட்டியுள்ளனர். “மே 22 – ஒரு சம்பவம்“ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஜனவரி 24-ம் தேதியன்று ஸ்விட்சர்லாந்து, டாவோஸ்ஸில் உள்ள புகழ்பெற்ற உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் பல சமுதாய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும்  நிலையில், “மே 22 – ஒரு சம்பவம்“ படத்தின் முதல் பார்வை போஸ்டர் உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது  முக்கியதுவம் வாய்ந்தது.  இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபால் மற்றும் தயாரிப்பாளர் நிருபமா சந்தோஷ் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இப்படம் சமீப காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.

மே 22 – ஒரு சம்பவம் திரைப்படம் ஒரு முன்று படங்களின் தொடர்ச்சியாகும். இம்மாதிரி உலகில் இரண்டு இயக்குனர்கள் படங்களை இயக்கியுள்ளனர்.

முதலாவதாக சத்யஜித்ரே உலகின் மிக முக்கிய படமான அபு சன்சார், பதேர் பாஞ்சாலி, அபு டிரியாலஜி என்று முன்று படங்களை இயக்கினார். அடுத்ததாக போலாந்து இயக்குனர் ரெட், புளு, வொய்ட் என்று முன்று படங்களை டிரியாலஜியாக இயக்கினார். இந்த முறையில் ஜல்லிகட்டு, பசுமை வழிச்சாலை, மே-22 ஒரு சம்பவம் என முன்றும் மக்கள் போராட்டத்தை மையப்படுத்தி எடுத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் கோபால்.