அதிர்ச்சியில் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள்…. ஏப்ரல் 3ம் தேதி வரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க முடியாது…… உச்ச வரம்பு விதித்த ரிசர்வ் வங்கி…

 

அதிர்ச்சியில் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள்…. ஏப்ரல் 3ம் தேதி வரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க முடியாது…… உச்ச வரம்பு விதித்த ரிசர்வ் வங்கி…

ஏப்ரல் 3ம் தேதி வரை, யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் (டெபாசிட் கணக்குதாரர்கள்) ஒரு கணக்குக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க ரிசர்வ் வங்கி உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது. இதனால் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியில் அடைந்துள்ளனர்.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கிக்கு அடுத்த மாதம் 3ம் தேதி வரை ரிசர்வ் வங்கி தடை விதித்தது. மேலும் அந்த வங்கியின் இயக்குனர்கள் குழுவையும் 30 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலைமை காரணம் காட்டி இந்த நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

மேலும் ஏப்ரல் 3ம் தேதி வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு கணக்குக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி உச்ச வரம்பு நிர்ணயம் செய்துள்ளது. இருப்பினும், டெபாசிட்தாரர்களின் நலன் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், பயப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் யெஸ் வங்கி டெபாசிட்தாரர்களுக்கு ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது. அதேசமயம் திடீரென பணம் எடுக்க கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதால் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர்.

யெஸ் வங்கி

அடுத்த சில நாட்களில், வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பிற்காக ரிசர்வ் வங்கி ஆராய்ந்து ஒரு திட்டத்தை வகுக்கும். மேலும் யெஸ் வங்கி மீதான தடை காலம் முடிவடைவதற்கு முன்பே, மத்திய அரசின் ஒப்புதலுடன் அந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஆகையால் டெபாசிட்தாரர்கள் நீண்ட நாட்களுக்கு சிரமப்பட வேண்டியது இருக்காது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.